Home இலங்கை இலங்கை எரிபொருள் துறைக்குள் – அமெரிக்கா

இலங்கை எரிபொருள் துறைக்குள் – அமெரிக்கா

by Jey

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட RM Parks Inc நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு சபை இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

RM Parks Inc நிறுவனமானது சர்வதேச ரீதியில் முன்னணி பெற்றோலிய பொருட்கள் விநியோக நிறுவனங்களில் ஒன்றாகும்.

குறித்த நிறுவனம் கடந்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி, RM Parks நிறுவனத்திற்கு இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்த பின்னணியில், தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி குறித்த நிறுவனத்தின் மூலம் Shell தயாரிப்புகள் இலங்கையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த ஒப்பந்தத்தின் மதிப்பு 110 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிறிய அளவிலான பல்பொருள் அங்காடிகள் மற்றும் இலத்திரனியல் வாகனம் சார்ஜ் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

related posts