தமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடா பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாரு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது.
33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21 ம் திகதி சர்வதேசரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது தமிழர்களின் சின்னமான கொடியின் முக்கியத்துவம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையிலும் உலகளாவியரீதியிலும் தமிழர்களின் வரலாறு கலாச்சாரம் நிரந்தரமான உணர்வுகள் என்பவற்றை கௌரவிப்பதற்கான புனிதமான தினத்தை இந்த நாள் குறிக்கின்றது.
நீதி மனித உரிமைகள் சுதந்திரத்திற்காக முன்னோர்களின் அளப்பரிய தியாகத்தினை நினைவுபடுத்தும் நாளாகவும் தமிழ் கொடி நாள் காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.