வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய சுற்றுலா பயணிகளுக்கான விசா விதிகளை தளர்த்தி வருகின்றன.
சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தும் முயற்சியில், ஈடுபட்டுள்ள வியட்நாம், இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு விசா இல்லாத நுழைவை பரிசீலித்து வருகிறது.
வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் தலைமையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளுக்கும் மற்றும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் 20 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசாவை வழங்கும் முன்மொழிவை பிரதமர் பாம்மின் சின் வழங்கியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஜேர்மன், பிரான்ஸ், சுவீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் வியட்நாமிற்குச் செல்லலாம்.
மற்ற நாடுகளுக்கு 90 நாள் செல்லுபடியாகும் விசா வழங்கப்படுகிறது.
இந்தியப் பயணிகளுக்கு இதுபோன்ற வசதிகளை வழங்கும் நாடுகளாக இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளதுடன், தற்போது வியட்நாமும் இதனுடன் இணைகிறது.