Home உலகம் அயர்லாந்தில் கத்தி குத்து 100-க்கும் அதிகமானோர் போராட்டத்தில்

அயர்லாந்தில் கத்தி குத்து 100-க்கும் அதிகமானோர் போராட்டத்தில்

by Jey

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது. மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி தாக்கினார்.

இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி, மேலும் இரு சிறுவர்கள், 30 வயது பெண் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ஐந்து வயது சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவ இடத்தில் 100-க்கும் அதிகமானோர் கூடினர். அவர்கள் போராட்டத்தில ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டனர்.

குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கோபத்தில், அவர்கள் வாகனங்களை தீயிட்டு எரித்தனர். மேலும், அருகில் உள்ள கடைகளை சூறையாடினர்.

சூழ்நிலை மோசமானதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே, கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் பயங்கரவாத செயலுக்கான ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் முழு விசாரணை நடத்தப்படும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் நாடு முழுவதும விரிவடைந்து விடக்கூடாது என பொலிசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாராளுமன்றத்தை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

related posts