2071 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலியாவின் சனத்தொகை 40 மில்லியனைத் தாண்டிவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பதிவாகும் பிறப்பு, இறப்பு மற்றும் இடம்பெயர்வுகளை அடிப்படையாகக்கொண்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைக் கணித்துள்ளது.
அவுஸ்திரேலியர்களில் 67 வீதமானோர் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர் என 2022 ஜுன் இறுதி தரவுகள் தெரிவிக்கின்றன.
2032 ஆம் ஆண்டாகும்போது அந்த எண்ணிக்கை 68 வீதமாக அதிகரிக்ககூடும்.
2022 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அவுஸ்திரேலியாவில் தற்போது 26 மில்லியன் பேர் வாழ்கின்றனர்.
2071 ஆகும்போது இந்த எண்ணிக்கை 34.3 மற்றும் 45.9 மில்லியன்வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.