Home விளையாட்டு கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு எதிராக செயற்பட்ட பொலிஸார்

கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு எதிராக செயற்பட்ட பொலிஸார்

by Jey

ஆஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிஸார் “அநியாயமான முறையில்” செயற்பட்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செலவு தொடர்பான வழக்கு இன்று நீதிபதி சாரா ஹாகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, அங்கு அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட வழக்கில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, குணதிலக்கவின் வழக்குக்கான செலவை அவரே பெற்றுக்கொள்ளும் வகையில் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தனது கையடக்கத்தொலைபேசியில் டேட்டிங் அப் (Dating APP ) மூலம் அறிமுகமான யுவதியை பாலியல் பலகத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி பொலிஸார் அவரை கைது செய்தனர்.

விசாரணையின் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் குணதிலக்க குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

related posts