இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போரில் கனடா எந்த ஒரு தரப்பிற்கும் ஆதரவளிக்கக் கூடாது என கனடா மக்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா இஸ்ரேல் -ஹமாஸ் விவகாரத்தில் நடு நிலையை பேண வேண்டும் என அதிகளவான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரச படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.