Home இலங்கை மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய கோரி பொலிஸாரால் மனு தாக்கல்

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய கோரி பொலிஸாரால் மனு தாக்கல்

by Jey

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸாரால் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ்.

மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்ப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்ப்பட்டிருந்தது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை (27.11.23023) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்றது.

இதன்போது மாவீரர் தினத்திற்கு தடை கோரிய பொலிஸின் மனுவை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நிராகரித்துள்ளார்.

 

 

 

related posts