இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள இந்தியா ஹவுசில், காந்தி ஹாலில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டு எம்.பி.க்கள் கேத்தரீன் வெஸ்ட், விரேந்திர சர்மா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசும்போது, இதுபோன்ற பயங்கர செயல்களை, கடந்த காலத்திலும், இப்போதும் மற்றும் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம்.
அவை திரும்பவும் நடைபெறாத வகையில் உறுதி செய்யப்படும் என்பதே இந்தியாவின் அணுகுமுறை என்று அவர் வலியுறுத்தி கூறியுள்ளார்.