ஐக்கிய இராச்சியத்தில் நாளை வியாழக்கிழமை (30) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் (Cop28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று யோசனைகளை முன்வைக்க உள்ளார்.
காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதே இலங்கையின் பிரதான முன்மொழிவாகும்.
வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளால் சிரமப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நிறுவுதல் மற்றும் வெப்பமண்டல மன்றத்தை நிறுவுதல் ஆகிய இரண்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி முன்வைக்க உள்ளார்.
Cop28 மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று ஐக்கிய இராச்சியம் நோக்கி புறப்பட உள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையின் கீழ் இலங்கையிலிருந்து 20 இளைஞர் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.