உத்தரகாண்டில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட உடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் பெரும் நிம்மதியும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மீட்பு பணியை நேரில் சென்று பார்வையிட்ட உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியாக அளிக்கப்படும் என்றார்.
மேலும் மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 15-30 நாட்கள் சம்பள பிடித்தமின்றி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சுரங்கத்தின் முகப்பு பகுதியில் பாபா பைத்யநாத் கோவிலும் கட்டும் திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்