Home இலங்கை யாழில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் மரணம்

யாழில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் மரணம்

by Jey

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியுமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ள துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்தவராவார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தைகளை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

related posts