Home இலங்கை சமூக வலைதளங்களில் வெளியான துவாரகா காணொளி போலியானது

சமூக வலைதளங்களில் வெளியான துவாரகா காணொளி போலியானது

by Jey

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறப்பட்டு வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் இலங்கை இராணுவ படை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த காணொளி , ஏ.ஐ. தொழிநுட்பத்தின்மூலம் வடிவமைக்கப்பட்டது என இலங்கை இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு போரில் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார் எனவும், அந்தப் போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டதாகவும் இலங்கையின் இராணுவம் தொடர்ந்தும் கூறிவருகிறது.

related posts