ஜெருசலேம் நகரின் நுழைவு பகுதியில் இன்று காலை பரபரப்பான நேரத்தில் 2 பேர் ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்களை நோக்கி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை இஸ்ரேல் நாட்டின் மேகன் டேவிட் ஆடம் என்ற ஆம்புலன்ஸ் சேவை அமைப்பு தெரிவித்து உள்ளது.
எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை. இதில், தாக்குதல் நடத்திய 2 நபர்கள் சம்பவ பகுதியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.