இந்தியரான நிகில் குப்தா என்பவர், அமெரிக்க மண்ணில் வைத்து சீக்கிய தீவிரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தநிலையில், 52 வயதான இந்த இந்தியரை, அமெரிக்க அதிகாரிகள், தமது நாட்டுக்குள் வைத்து, தமது குடிமகனான சீக்கியத் தலைவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் முக்கியமானவராகக் கருதுகின்றனர்.
செக் குடியரசில் ஜூன் மாதம் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரியே இந்த கொலைக்கான திட்டத்தை தீட்டியுள்ளார்
இதனையடுத்து குப்தாவின் ஊடாக கொலைக்காக ஒரு இரகசிய முகவருக்கு 100,000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் குப்தாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.