ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரில் இடம்பெறும் ஐந்தாவது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை உகாண்டா பெற்றுள்ளது.
டி20 உலகக் கிண்ணத்துக்கான தெரிவுகான் போட்டிகளில் விளையாடிவரும் உகாண்டா அணி, விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளை பெற்றதன் மூலம் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கிண்ண தொடருக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் உகாண்டா அணி, பெற்றுள்ளது.
ஐசிசி உலகக் கிண்ண தொடர் ஒன்றில் உகாண்டா அணி, பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.
தகுதிச் சுற்றில் உகாண்டா தனது முதல் போட்டியில் தான்சானியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடுத்த போட்டியில், நமீபியாவிடம் தோல்வியடைந்தது.
அடுத்த போட்டியில் பலம்வாய்ந்த சிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நைஜீரியாவை எளிதாக வென்ற உகண்டா அணி, ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் மற்றுமொரு பலம்வாய்ந்த அணியான கென்யாவை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
அத்துடன், ருவாண்டா அணியையும் ஒன்பது விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் டி20 தொடரில் பங்கேற்பதை உகண்டா அணி உறுதி செய்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாக உகண்டா அணிக்கு இது அமைந்துள்ளதால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் உகண்டா அணிக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.