Home கனடா நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்

நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்

by Jey

பெரும்பான்மையான கனடியர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாட்டுக்குள்; கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதாகத் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குடியேறிகளின் வருகையானது ஆளணி வளத்தை அதிகரிக்கும் எனவும், இதன் மூலம் வரி வருமானங்களை அதிகரித்துக்கொள்ள முடியும் என கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மற்றுமொரு தரப்பினர் தெரிவித்துள்ளார்.

related posts