Home இந்தியா சென்னையில் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

சென்னையில் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

by Jey

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேரு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை தற்போது சிறு வெள்ளமாக உருவெடுத்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை நீர் குளம் போல் தேங்கி காட்சியளிப்பதை அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக இருக்கின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக சென்னையில் பல பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

related posts