Home இந்தியா 81 கோடி குடிமக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் – மோடி

81 கோடி குடிமக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் – மோடி

by Jey

81 கோடி குடிமக்களுக்கு கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ், 2028 டிசம்பர் வரை மத்திய அரசு தொடர்ந்து இலவச உணவுப் பொருட்களை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த திட்ட நீடிப்புக்காக சுமார் 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சுமார் 13.50 கோடி இந்தியர்கள் வறுமை நிலைக்கு மேலே உயர்ந்துள்ளனர்.

இது மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

related posts