அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது வழக்கம்.
இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், ” 2024 நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. ஜோ பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாடு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அப்போது, அதில் கலந்துகொள்ள டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனால் தான் அவமதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே எலான் மஸ்க் இந்தக் கருத்தையும் தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.