வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பற்றாக்குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதன் நிமித்தம், தாம் விரைவில் வடக்கு மாகாணத்துக்கு செல்லவுள்ளதாக இலங்கைவின் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,சார்ளஸ் நிர்மலநாதன்,வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன்,இம்ரான் மஹ்ரூப் ஆகியோரின் சுட்டிக்காட்டல்களை அடுத்தே அமைச்சர் இந்த பயணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடக்குகிழக்கு மாகாணங்களின் முருங்கன்,புதுக்குடியிருப்பு, அம்பாறை, திருக்கோவில்.மட்டக்களப்பு போன்ற இடங்களில் மருத்துவமனைகள் தொடர்பிலேயே வடக்குகிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.