வவுனியாவில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை வவுனியா ஊடக அமையத்தினர் நாளை சனிக்கிழமை நடத்தவுள்ளனர்
வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை காவல்துறையினரின் அடக்கு முறைகள் தொடர்வதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வடக்கு-கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வவுனியாவில் செய்தி சேகரில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்
அத்துடன் ஊடகவியலாளர் ஒருவர் மீது பொய்யான வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஊடக அமையத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்