கொழும்பின் கொட்டாஞ்சேனை மற்றும் புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கு விசாரணை, 2024 மார்ச் 28ஆம் திகதி நடத்தப்படவுள்ளது
இலங்கையின் உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கின் பிரதிவாதியான இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக ஏற்கனவே வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்
இந்த வழக்கு மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணை ஒத்திவைக்கப்படவேண்டும் என்பதை ஏற்றே உயர்நீதிமன்றம், தமது விசாரணையை 2024ஆம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது
14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
previous post