கனடிய பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பனவற்றிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
கனடாவில் இயங்கி வரும் சீன சமூக நிலையங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
சீன அரசாங்கத்தின் பொலிஸ் நிலையங்கள் இரகசியமாக இயங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் சீன சமூக நிலையங்கள் இவ்வாறு வழக்குத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளன.
சீன பொலிஸ் நிலையங்கள் குறித்த குற்றச்சாட்டுக்காக 2.5 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.