Home இலங்கை புதிதாக பேசப்படும் கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் – எச்சரிக்கை

புதிதாக பேசப்படும் கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் – எச்சரிக்கை

by Jey

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிதாக பேசப்படும் கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்து தாம் இந்த கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, குறித்த அமைப்பு எச்சரித்துள்ளது
கிளிநொச்சி வளாகத்தினுள் அடங்கும் சகல பீடங்களினதும் பீடாதிபதிகளுக்கும் இந்த தகவலை குறித்த அமைப்பு அனுப்பியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளையும், மறுநாள் 27 ஆம் திகதி மாவீரர் நினைவேந்தலையும் கடைப்பிடித்தமை, கிளிநொச்சி வளாகத்தில் அமைதியின்மை மற்றும் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என சில சிங்கள மாணவர்கள் ஏற்கனவே முறையிட்டிருந்தனர்
சிலர் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு அநாமதேயமாக முறைப்பாடுகளையும் செய்திருந்தனர்.
இந்தநிலையில் குறித்த அநமாதேய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டதன் பின்னணியில் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்; தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத – பதிவு செய்யப்படாத கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் பீடாதிபதிகளுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

related posts