கனடிய இராணுவப் படைகளில் பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவத்தில் கடந்த ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
பாலியல் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதாக கனடிய இராணுவம் உறுதிமொழி வழங்கிய நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கனடிய இராணுவத்தில் இடம்பெற்ற பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவத்தைச் சேர்ந்த 3.5 வீதமானவர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.