காஷ்மீா் பிரச்சினை சம்பந்தமான விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என சீனா நேற்று வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை இந்திய மத்திய அரசு நீக்கியது செல்லும் என டெல்லி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீா்ப்பு வழங்கிய நிலையில் சீனா இதனை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடா்பாளா் மாவோ நிங் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்த பிரச்சினைகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு ஐ.நா பாதுகாப்பு பேரவையின் பிரகடனங்கள் மூலம் அமைதியான முறையில் தீா்வு காணப்பட வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலம் உடன்படிக்கை செய்துக்கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.