Home கனடா ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக தடை விதித்த கனடிய அரசாங்கம்

ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக தடை விதித்த கனடிய அரசாங்கம்

by Jey

சுமார் 30 ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.

உக்ரேனுக்கு சொந்தமான பகுதிகளில் ரஷ்யா நடத்தும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை கனடா தடை செய்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த தேர்தல் நடைபெற்ற போது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

உக்கிரனின் சில பகுதிகளை ரஷ்யா பலவந்தமாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றது .

இவ்வாறான பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கனடா நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

related posts