சிங்கப்பூர் – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை சிங்கப்பூர் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லொங்க் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் சிங்கப்பூருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.