குற்றச் செயலில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்ற கனடிய பிரஜை ஒருவரை கண்டு பிடிக்க உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய பொலிஸார், இன்டர்போலிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த சுமார் 60 வயதான ராஜ் குமார் மெஹ்மி என்ற நபரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மெஹ்மி மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
80 கிலோ கிராம் எடையுடைய கொக்கோய்ன் போதைப் பொருளை கனடாவிற்குள் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக மெஹ்மிக்கு கனடிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மெஹ்மியை கைது செய்யும் நோக்கில் கனடிய அதிகாரிகள்;, சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர்.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் மெஹ்மி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.