1974ம் ஆண்டு வெளியான ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரா சங்கரன்.
தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில் மீன், பெருமைக்குரியவள், வேலும் மயிலும் துணை, குமரி பெண்ணின் உள்ளத்திலே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் ஆவதற்கு முன்னதாக அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
1962ல் வெளியான ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய ரா சங்கரன், ஒரு கைதியின் டைரி, பகல் நிலவு, அமரன், சின்ன கவுண்டர், சதி லீலாவதி, காதல் கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரா சங்கரனின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “எனது ஆசிரியர் இயக்குநர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ரா சங்கரன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த மேலும் பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.