வெனிசுலாவின் தலைநகர் கராகசை இணைக்கும் கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த லொரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொரி, சுமார் 17 வாகனங்கள் மீது மோதியதில் அவ்வாகனங்கள் பலத்த சேதமடைந்து, தீப்பிடித்து எரிந்ததுடன், பஸ் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.