இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட சிறைகளில் ஒன்றாக கருதப்படுவது சென்னையை அடுத்து அமைந்துள்ள புழல் சிறை.
இங்கிருந்து பெண் கைதி ஒருவர் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்தவர் 32 வயதான ஜெயந்தி. இவர் வீடுகளில் புகுந்து திருடிய புகாரில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஜெயந்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஜெயந்தி மதியம் 3 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
இதையடுத்து, சிறை அலுவலர்கள், சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பொதுமக்கள் மனு கொடுத்து கைதிகளை பார்க்கும் அறை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் சிறை வார்டன்ங்கள் கோகிலா, கனகலட்சுமி ஆகிய இருவரை புழல் சிறை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.