சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ரயில் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை நடந்துள்ளது. கடுமையான பனி காரணமாக ரயில் தடங்கள் வழுக்குவதே காரணம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழுக்கும் தடங்களால் முன்நோக்கி சென்ற ரயிலின் தானியங்கி பிரேக் இயங்கியுள்ளது. இதனால் பின்னால் வந்த ரயிலும் வழுக்கும் தடங்களில் நிற்க முடியாமல் மோதி விபத்துக்கு உள்ளாகின.
மருத்துவ ஊழியர்கள்,பொலிஸார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
கடந்த புதன் கிழமை சீனாவின் வடக்கு பிராந்தியங்களில் ஏற்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில ரயில்கள் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.