தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 16, 17 திகதிகளில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த இரண்டு நாட்களிலும் கன மழையில் இருந்து மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதோடு புதுச்சேரிக்கும் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் 115 மில்லி மீற்றரிலிருந்து 205 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.