இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் ஜெர்சி எண்ணான 7க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2007ல் டி20 உலகக் கோப்பையையும், 2011ல் 50 ஓவர்கள் உலகக் கோப்பையையும் வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் தோனியின் 7-ம் எண் ஜெர்சி எந்த வீரருக்கும் இனி கிடைக்காது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு புகழாரம் செலுத்தும் வகையில், தோனியின் எண்ணிற்கு ‘ஓய்வு’ செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2017ல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அணிந்திருந்த நம்பர் 10 ஜெர்சிக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.