ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில், இந்தியா உட்பட 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்குவதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரான் அமைச்சரவை இதற்கான முடிவை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லா சர்காமி அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.