கனடாவில் பயன்படுத்தப்படும் பிரபல கார்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 193000 கார்கள் மீள அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய போக்குவரத்து திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் உற்பத்தி செய்த கார்களே இவ்வாறு மீளப் பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 7ம் திகதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வாகனம் தொடர்பில் கனடிய தேசிய அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.