தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் பிரபல சரிகம பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.
இந் நிலையில், நேற்றைய தினம் (17.12.2023) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதன்படி, சரிகம லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியின் ரன்னராக ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, அரங்கம் முழுவதும் அதிர தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இரசிகர்கள்.
இதேவேளை எம் மண்ணுக்கும் மண்ணுக்காக உயிர் துறந்த எம் மறவர்களுக்கும் எனது வெற்றி சமர்ப்பணம்.
எனக்கு இத்தனை அன்பும் ஆதரவும் தந்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிள்ளையாய் என்றும் நான்.. என கில்மிசா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.