Home இந்தியா திமுக அரசின் கொடுஞ்செயல் கண்டனத்திற்குரியது – சீமான்

திமுக அரசின் கொடுஞ்செயல் கண்டனத்திற்குரியது – சீமான்

by Jey

தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை ஆளும் திமுக அரசு உயர்த்தியது. இதற்கு தொழில் நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

கடுமையான மின்கட்டண உயர்வு மூலம் தமிழ்நாட்டிலுள்ள 10 இலட்சம் தொழில் முனைவோர்கள் மற்றும் அதில் பணியாற்றும் 1 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு இருளாக்கியுள்ளது பெருங்கொடுமை என்றும் தெரிவித்துள்ளார்.

related posts