நாய்கள் அழுமா?
என்னால் நம்ப முடிவில்லை
கண்ணில் தண்ணீர் வர
அவை அழுகின்றன
தான் தின்று முடித்த
கோழியினுடைய இரத்தம்
சிதறி விட்டதே என்று
அவை பதறி அழுகின்றன!
பல கோடி நட்சத்திரம்
எழுகிறவானில்
ஒற்றை நட்சத்திரம் உதிர்வதைப் போல
கோழியின் சிதைவு
யாரும் அதனை
கண்டு கொள்வதில்லை
ஒரு யானையின்
இறப்பைப் போல
ஒரு கோழியின் இறப்புப்
புதினமா என்ன ??