நீ தடுமாறி நிற்கிறாய் !
உன்னை மறைக்கிறது கண்ணீர்ப்புகை !
நீ அநாதரவாக்கிக் கொன்ற
ஒன்றரை இலட்சம் அந்தரித்த ஆன்மாக்கள்
உன்னை இன்று உலுப்பியாட்டுகின்றன !
காய்த்த மரமென்று நீ எண்ணிய
ராஜபக்ஸ மரங்கள்
பொலபொலவென்று உதிர்கிறது !
நீ எரித்த 95000 தமிழரின்
புத்தகச் சாம்பலுள்
நீங்களே புதைகிற வேளையிது !
இனவாதத்தால் தமிழனை அழித்து
அவமானம், அடாவடி,
அச்சுறுத்தல், கொலையென
தமிழரின் ஒட்டு மொத்த
தலைகளைக் கொய்த
கொலைக்கரம் 13 வருடங்கள் காத்திருந்து
அதே மேயில்
இன்று உன்னை
நோக்கி வருகிறது !
இனி இலங்கையை அழி!
நீதி பின்தங்கிய தென்கின்றார்கள் ….
ஆனாலும்
நீ கிழித்தெறிந்த தமிழர்கள் தாவணிகளில்
நீங்களே தொங்குகிற நேரமிது !
தமிழனை அமிழ்த்தி நீங்கள்
மூடாது விட்ட இந்துப் பெருங்கடலுள்
நீங்களே அமிழ்கிற பொழுது !
உனக்குத் தெரியாது நீ தொடக்கிய கொலைக்கரத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லையென்பதை….
கை,வாய், வயிறு, கண், தலை என்றெல்லாம்
இராணுவமாயிருந்த நீ இன்று
தன்னந் தனியனாய் நிற்கின்றாய் !
இன்று உன் புத்தனின் பற்களில்
உன் இன இரத்தம்!