மல்லிகை!
வெட்ட வெட்ட தளைத்தெழுந்த
இலக்கிய மகா விருட்சம்!
“ஜீவா” என்கிற ஒற்றைக்
கொழுகொம்பேறி
உலகெங்கும் தன்னை
நிலை நிறுத்திய சுயம்பு !
ஆதிக்க மேட்டிமை
ஆணாதிக்க வன்மம்
தீண்டாமைக்
கற்பாரில்
மிதிக்க மிதிக்க
முளைவிட்ட மல்லிகை!
முளைக்குமா? முளைக்காதா?
என்ற எந்த
நம்புக்கையுமற்றுத்தான்
தன் ஒற்றை வேரோடு
ஏற்றத்தாழ்வுப்
பாலைவனத்துள்
அல்லாடியது
அச் சிறுகொடி!
தீண்டாமைப்
பேரிருளில்
வேரிறக்கி
கொடு வெயில்
பெரு மழை
பகலிரவு பாராமல்
48 வருடங்கள்
நடையாய் நடந்து
உலகனைத்தும் ஒளிர்கிறது
மல்லிகை!
யாழ்ப்பாணப் பாறைக்குள்
பசளையிடவும் நீருற்றவும்
பலரில்லைத்தான்…ஆனாலும் உலகத்துப்
பாமரரின் மனத்தோட்டமெங்கும்