Home இலங்கை யாழில் – வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை

யாழில் – வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை

by Jey

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதைபொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்போதே சந்தேகநபர்கள் வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி, போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில், சந்தேகநபர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் பல மாணவர்கள் இவர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ள நிலையில், அவர்களை இனம் காணும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

related posts