கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது.
தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோரின் வருகையின் காரணமாக சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளது.
சுமார் 66 ஆண்டுகளின் பின்னர் ஒரு காலாண்டில் கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி இந்த ஆண்டின், மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதத்தில் நாட்டின் சனத்தொகையானது 40.5 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டில் அதிகரித்த மொத்த சனத்தொகையில் 313000 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.