கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதை அந்நாடு உணர வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “ இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள்.
இந்த விவகாரத்தில் நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
முக்கியப் பிரச்சினை என்னவென்றால் அந்த நாடு, பயங்கரவாதிகளுக்கும் இந்தியாவுக்கு எதிரானவர்களுக்கும் இடம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதே..!
கனடாவின் பேச்சு சுதந்திரத்தை சில சக்திகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை உணர்ந்து அந்த நாடு அத்தகையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக” தெரிவித்தார்.