ஹமாஸ் இயக்கம் சரணடைய வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காசாவில் உருவாக்கப்படக்கூடிய எதிர்கால ஆட்சியில் ஹமாஸ் இயக்கம் பங்கேற்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு தீர்வுத் திட்டத்திலும் ஹமாஸ் இயக்கம் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அண்மையில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஆதரித்த போதிலும் அது ஹமாஸ் இயக்கத்திற்கு சார்பான தீர்மானம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தும் நோக்கில் ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக ட்ரூடோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.