வியாழன் காலை பிராம்டனில் தீப்பிடித்து பெரு வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
அதிகாலை 2 மணியளவில் கென்னடி ரோடு மற்றும் கன்சர்வேஷன் டிரைவில் அமைந்த அந்த வீடு எதனால்எரிந்தது என்கிற விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்குஅழைக்கப்பட்டனர் எவருக்கும் உயிராபத்து எதுவும் இல்லை என்றும், இந்த சம்பவம் பயங்கரவாதசந்தேகத்திற்குரியதாக தெரியவில்லை என்றும் பீல் போலீசார் தெரிவித்தனர்.
பக்கத்து வீடுகளுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து நடந்த வீட்டிற்கு வெளியே வீடுவிற்கப்பட்ட அடையாளம் காணப்பட்டது.