தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினோன் என்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (21.12.2023) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.