Home உலகம் வெள்ளக்காடாக மாறிய கலிபோர்னியா

வெள்ளக்காடாக மாறிய கலிபோர்னியா

by Jey

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கடற்கரை பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கனமழையால் சாலைகள் அனைத்து வெள்ளக்காடாக மாறியதால் பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இதேபோல தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆக்சினாட், வென்சுரா பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டன. அங்கிருந்து 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் கலிபோர்னியா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

related posts